தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே |
1. | வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! |
|
2. | வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே! |
|
3. | ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! |
|
4. | எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய வே! |
|
5. | சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே! |
|
6. | தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நா டே! |
|
7. | வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே! |
|
8. | வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே! |
No comments:
Post a Comment