தன் சைனியத்திற்குக் கூறியது |
| ஜயஜய பவானி!ஜயஜய பாரதம்! ஜயஜய மாதா!ஜயஜய துர்க்கா! வந்தே மாதரம்!வந்தே மாதரம்! |
|
| சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்! யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! | 5 |
| அதிரத மன்னர்காள்! துரகத் ததிபர்காள்! எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்! கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர்,
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச் | 10 |
| செற்றிடும் திறனுடைத் தீரரத் தினங்காள்!
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய! தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா ஆற்றலகொண் டிருந்நததிவ் வரும்புகழ் நாடு! | 15 |
| வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும் பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும் | 20 |
| நிர்மல முனிவரும் நிறைந்தநன் னாடு!
வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி யென் றுரைத்திடு நாடு!
பாரத பூமி பழம்பெரும் பூமி; நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்! | 25 |
| பாரத நாடு பார்க்கெலாம் திலகம் நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும் ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடும் நாடு! கங்கையும் சிந்துவும் | 30 |
| தூத்திரை யமுயையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
மைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க பைந்நிற முகில்கள் வழங்குபொன் னாடு! | 35 |
| தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு!
ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி வானவர் விழையும் மாட்சியர் தேயம்!
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? | 40 |
| நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்!
தாய்த் திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர், பேய்த்தகை கொண்டோர்,பெருமையும் வண்மையும்,
ஞானமும் அறியா நவைபுரி பகைவர், வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் | 45 |
| இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! | 50 |
| சாத்திரக் தொகுதியைத் தாழ்த்துவைக் கின்றார் கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்!
எண்ணில துணைவர்காள்!எமக்கிவர் செயுந்துயர்; கண்ணியம் மறுத்தனர்;ஆண்மையுங் கடிந்தனர்;
பொருளினைச் சிதைத்தனர்;மருளினை விதைத்தனர்; | 55 |
| திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்;
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்; சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்துநம் ஆரியம் புலையருக் கடிமைக ளாயினர் | 60 |
| மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை? வெற்றிகொள் புலையர்தாள் வீழ்நதுகொல் வாழ்வீர்?
மொக்குள்தான் தோன்றி முடிவது போல மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை | 65 |
| மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ? | 70 |
| பிச்சைவாழ் வுகந்து பிறருடை யாட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்.
புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் | 75 |
| ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் கிறியர் யாரிவன் உளரவர் யாண்டேனும் ஒழிக!
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக் கடைபடு மாக்களென் கண்முன்நில் லாதீர்! | 80 |
| சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க!
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான் வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக!
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் | 85 |
| பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க!
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க!
ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும் வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன் | 90 |
| ஆரியர் இருமின்!ஆண்கள் இங்கு இருமின்! வீரியம் மிருந்த மேன்மையோர் இருமின்!
மானமே தெரிதென மதிப்பவர் இருமின்! ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!
தாய்நாட்டன்புறு தனையர்இங்கு இருமின்! | 95 |
| மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்! கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!
ஊரவர் துயரில் நெஞ் சுருகுவீர் இருமின்! சோரநெஞ் சில்லாத் தூயவர் இருமின்! | 100 |
| தேவிதாள் பணியுந் தீரர்இங்கு இருமின்! பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்! கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!
வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்! | 105 |
| நம்மனோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்? மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின்
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும். பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் | 110 |
| வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும் இராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர்;வானக நாடுறும்; வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்.
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் | 115 |
| செற்றினி மிலேச்சரைக் தீர்த்திட வம்மின்!
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும், ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் | 120 |
| உருளையி னிடையினும், மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்!
நம் இதம்;பெருவளம் நலிந்திட விரும்பும் (வன்மியை)வேரறத் தொலைத்தபின் னன்றோ
ஆணெனப் பெறுவோம்;அன்றிநாம் இறப்பினும் | 125 |
| வானுறு தேவர் மணியுல கடைவோம்!
வாழ்வமேற் பாரத வான்புகழ் தேவியைத் தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்!
போரெனில் இதுபோர்!புண்ணியத் திருப்போர்! பாரினில் இதுபோற் பார்த்திடற்கெளிதோ? | 130 |
| ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே;
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்.
வேள்வியில் இதுபோல் வேள்வியொன் றில்லை; | 135 |
| தவத்தினில் இதுபேவால் தவம்பிறி தில்லை
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று | 140 |
| இன்னவர் இருத்தல்கண்டுஇதயம்நொந் தோனாய்த் தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
"ஐயனே!" இவர்மீ தம்பையோ தொடுப்பேன்! வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன் | 145 |
| மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்; கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது;
வாயுலர் கின்றது;மனம் பதைக் கின்றது; ஓய்வுறுங் கால்கள்;உலைந்தது சிரமும்;
வெற்றியை விரும்பேன்;மேன்மையை விரும்பேன்; | 150 |
| சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்;
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்; சினையுறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?"
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன் னப்படை வில்லைக் களத்தினில் எறிந்து | 155 |
| சோர்வொடு வீழ்ந்தனன்; சுருதியின் முடிவாய்த் தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி, "புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்,
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச் | 160 |
| செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்.
உண்மையை அறியாய்;உறவையே கருதிப் பெண்மைகொண் டேதோ திற்றிநிற் கின்றாய்
வஞ்சகர்,தீயர்,மனிதரை வருத்துவோர், நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்;இன்னோர் | 165 |
| தம்மொடு பிறந்த சகோதர ராயினும், வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்,
ஆரிய நீதிநீ அறிந்திலை போலும்! பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைக்தும் | 170 |
| பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று!நின் பெருமையை மறந்திடேல்! ஈடிலாப் புகழினாய்!எழுகவோ எழுக!
என்றுமெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக் குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் | 175 |
| அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய் மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்,
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் | 180 |
| இசையுநற் றவத்தால் இன் றுவாழ்ந் திருக்கும்
ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர், தேரில்,இந் நாட்டினர்,செறிவுடை உறவினர்;
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர் செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம் | 185 |
| பிறப்பினில் அன்னியர்,பேச்சினில் அன்னியர் சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார். |
No comments:
Post a Comment