அன்னை

"அ"ன்பின் நாயகியாய்
"ஆ"திமூலத்தின் பிறப்பிடமாய்
"இ"ல்லறத்தின் தலைவியாய்
"ஈ"கையில் கொடைவள்ளலாய்
"உ"ண்மையின் உறைவிடமாய்
"ஊ"ட்டி வளர்ப்பதில் அமுதசுரபியாய்
"எ"ண்ணங்களின் பிறப்பிடமாய்


"ஏ"ற்றத்தில் ஏணியாய்
"ஐ"யங்களின் ஆசானாய்
"ஒ"ழுக்கத்தில் உன்னதமாய்
"ஓ"வியங்களின் உயிராய்
"ஔ"டதங்களின் சிகரமாய்
"அக்கு" என்னும் இறுகிய மனமுடன் வளர்ப்பவளே
அன்னை என்னும் அன்போவிய அம்மா...நீங்கள் பல்லாண்டு வாழ்க...

No comments:

Post a Comment