காக்கை சிறகினிலே

காக்கை சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே
நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே (சின்னஞ்சிறு)

அன்னை

"அ"ன்பின் நாயகியாய்
"ஆ"திமூலத்தின் பிறப்பிடமாய்
"இ"ல்லறத்தின் தலைவியாய்
"ஈ"கையில் கொடைவள்ளலாய்
"உ"ண்மையின் உறைவிடமாய்
"ஊ"ட்டி வளர்ப்பதில் அமுதசுரபியாய்
"எ"ண்ணங்களின் பிறப்பிடமாய்

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதை

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?